கொழும்புத் துறைமுகத்தின் காணி உரிமை முற்றுமுழுதாக இலங்கையைச் சார்ந்தது என அரசு வலியுறுத்தல்

Share Button

கொழும்பு துறைமுக நகரத்தின் காணி உரிமை முற்று முழுதாக இலங்கையைச் சார்ந்தது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். துறைமுக நகரப் பிராந்தியத்தை நிர்வகிப்பதற்காக கொழும்பு மாநகர சபைக்கு அப்பால் விசேட நிர்வாக அமைப்பொன்றை ஸ்தாபிக்கப் போவதாக அமைச்சர் கூறினார். அவர் நேற்று கண்டியில் இடம்பெற்ற பயிலரங்கில் உரையாற்றினார்.

துறைமுக நகரம் என்பது 1998ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட கொழும்பு பெருநகர திட்டத்தின் மூலம் உருவான யோசனையாகும். இது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைய இதனை நிதி நகராக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-04 | 16:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 162
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 132
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 273
நோயிலிருந்து தேறியோர் - 25
இறப்புக்கள் - 5