தேசிய நல்லிணக்க தமிழ்-சிங்கள புத்தாண்டு விழா இன்று யாழ்ப்பாணத்தில்

Share Button

இவ்வாண்டுக்குரிய தமிழ் – சிங்கள புத்தாண்டு தேசிய விழா யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறவுள்ளது. இந்த விழா யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறும். நல்லிணக்க மேம்பாடு என்பது தொனிப்பொருளாகும். தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு இதனை ஏற்பாடு செய்கிறது. தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் யாழ்.மாவட்டச் செயலகத்துடன் இணைந்து நிகழ்வை நடத்துகின்றன. அமைச்சர் மனோ கணேசன் தலைமை தாங்குகிறார்.

இதற்குரிய ஒழுங்குகள பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க புத்தாண்டு விழாவில் தமிழ்-சிங்கள பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் கலாசார நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *