கனேடிய உயர்ஸ்தானிகரும், ஈரானியத் தூதுவரும் வடமாகாண ஆளுநருடன் சந்திப்பு.

Share Button

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரையும், ஈரானியத் தூதுவரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்புக்கள் கொழும்பில் இடம்பெற்றன.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் னுயஎனை ஆஉமுinழெn உடனான சந்திப்பில் வடக்கில் கனேடிய அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்திகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான ஈரான் தூதுவர் ஆழாயஅஅயன ணுயநசi யுஅசையni உடனான சந்திப்பு ஈரானிய தூதரகத்தில் இடம்பெற்றது. மத்திய மாகாணத்திலிருந்து நிலக்கீழ் குழாய் ஊடாக வடக்கிற்கு குடிநீரை எடுத்துச் செல்லும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு ஈரான் அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆளுநரின் கோரிக்கைக்கு ஈரானிய தூதுவர் சாதகமான பதிலை அளித்திருப்பதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *