நாட்டில் கடந்த சில நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 42 பேர் பலி.
நேற்றுடன் முடிவடைந்த ஐந்து நாட்களில் நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 42 பேர் கொல்லப்பட்டிருக்கிறாhகள், 31 விபத்துக்களினால் இந்த மரணம் சம்பவித்திருக்கிறது. மஹியங்களை பிரதேசத்தில் கூடுதலான மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. இந்த பிரதேசத்தில் இடதம்பெற்ற வாகன விபரத்தில் 10 பேர் உயிரிழந்தார்கள். மட்டக்களப்பைச் சேர்ந்த இவர்கள் வான் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் விபத்துக்குள்ளானார்கள். கடுமையான காயங்களுக்குள்ளான 13, 16எ வயதுகளைச் சேர்ந்த சிறுவர்கள் பதுளை வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சையை பெற்று வருகிறார்கள். விபத்திற்குக் காரணமான தரப்புக்களில் ஒன்றாக கருதப்படும் பஸ் சாரதியும், சேவை அனுமதிப்பத்திரமும் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. சாரதிக்கான இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின்; சாரதி அனுமதிப்பத்திரமும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை – கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் வட்டவளைப் பிரதேசத்தில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது. வீதியை விட்டு விலகிய வாகானம் 10 அடி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்திருப்பதாக பொலிஸார் அறிவித்துள்ளார்கள். சம்பவத்தில் காயமடைந்த ஒன்பது பேர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.