தாக்குதலில் பலியானவர்களது குடும்பங்களின் நலன்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென நிமால் சிறிபால டி சில்வா கோரியுள்ளார்

Share Button

பலியானவர்களுக்கு நட்டஈடு வழங்குவது மாத்திரம் போதுமானதாக அமையாதென விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமால் சிரிபால டி சில்வா தெரிவித்தார். பலியானவர்களது குடும்பங்களின் நலன்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

குண்டு வெடிப்புக்களுடன் தொடர்புடைய பலர் தற்சமயம் கைது செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். இந்த சர்வதேச பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கையுடன் ஒன்றிணைந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் ஒவ்வொருவர் மீது குற்றம் சுமத்துவதில் பலனில்லை. நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல சகரும் ஒன்றிணைய வேண்டுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த அனர்த்தத்தை தவிர்க்க முடியாமையானது துரதிஷ்டவசமானது என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களை தவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11