தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி இயக்கங்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளன
தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் – யேவழையெட வுhயறாநநன துயஅஅயவா (Nவுது) மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி இயக்கம் – துயஅயவாநi ஆடைடயவார ஐடிசயாநநஅ ணநடையni (துஆஐ) ஆகியன இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசர கால கட்டளையின் கீழ், ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய அந்த இயக்கங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் செயற்பட்டுவரும் ஏனைய இனவாத அமைப்புக்களின் செயற்பாடுகளும் அவசர கால கட்டளையின் கீழ் தடை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.