எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

Share Button

இன்று தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றும் அதிகரித்து வீசக்கூடும். ஃபானி புயல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. சப்ரகமுவ, மத்திய, தெற்கு, மேல், வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல இடங்களில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஹம்பாந்தோட்டையில் இருந்து மட்டக்களப்பு, மற்றும்  திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பகுதிக்கு மீள் அறிவித்தல் விடுக்கும் வரையில் மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *