கேரள மாநிலத்தில் தற்கொலைத் தாக்குதலைத் திட்டமிட்ட சந்தேக நபர் கைது

Share Button

இந்தியாவின் கேரள மாநிலத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தத் திட்;டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகவராண்மை நிலையம் அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவரின் பெயர் றியாஸ் என்பதாகும். இவர் றியாஸ் அபூபக்கர், அபு துஜானா என்ற பெயர்களில் நடமாடியதாக தேசிய புலனாய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் பாலக்காட்டில் இருந்து காணாமற்போனதுடன், அவர்கள் ஐஎஸ் இயக்கத்துடன் இணைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் றியாஸ் அபூபக்கர் கைதாகியுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *