அடிப்படைவாதத்தை தோற்கடிக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு

Share Button

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பாடசாலை கட்டமைப்பிற்குள் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இனம், மதம், மொழி என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைகளை வேறுபடுத்த முடியாது. சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் கல்வி அமைச்சு பொறுப்புடன் செயற்படுவதாக அவர் கூறினார். எமது நிலையத்தில் நடைபெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பாராளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கு அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *