ஜப்பானின் 200 வருட பாரம்பரியத்தை மீறி, ஜப்பான் பேரரசர் இன்று பதவி விலகியுள்ளார்.

Share Button

ஜப்பான் பேரரசர் அக்கிஹித்தோ பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்;கின்றார். பொதுமக்கள் மூன்று தசாப்தங்களாக தமக்கு வழங்கிய ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்திருக்கின்றார். பேரரசர் அக்கிஹித்தோ பேரரசர் பதவியை வகிக்கும் வேளையில் ஆற்றிய இறுதி உரை இதுவாகும். ஜப்பான் கடந்த 200 வருட அரசாட்சியில் ஆட்சியில் பேரரசர் ஒருவர் பதவியிலிருந்து விலகும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். பேரரசரின் மகனும், முடிக்குரிய இளவரசருமான நருஹிட்டோ நாளை ஜப்பானின் புதிய பேரரசராக பதவியேற்கவிருக்கிறார். புதிய பேரரசரின் யுகம் ஜப்பான் நாட்காட்டியில் ரீவா என்று அழைக்கப்படவிருக்கிறது. 85 வயதான பேரரசர் அக்கிஹித்தோ ஜப்பான் மக்களிடையில் உயர்ந்த கௌரவத்திற்கு பாத்திரமானவராக கருதப்படுகிறார். வயது, இயலாமை என்பனவற்றை கருத்திற்கொண்டு இந்தப் பதவியிலிருந்து விலகுவதாக பேரரசர் அறிவித்திருக்கின்றார். ஜப்பானில் பேரரசருக்கு அரசியல் ரீதியாக எந்தவித அதிகாரமும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு மத்தியில் மரபு ரீதியாக இருந்துவரும் கௌரவம் தொடர்ந்தும் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *