மாலபேயிலிருந்து கொழும்பு கோட்டை வரை பல்வசதி கொண்ட போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படும்

Share Button

மாலபேயிலிருந்து கொழும்பு கோட்டை வரை பல்வசதி கொண்ட போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 17 கிலோமீற்றர் இடைவெளி உள்ள இந்தத் தூரத்தில் 16 தரிப்பிடங்கள் நிர்மாணிக்கப்படும். விசேட பஸ் டிப்போ ஒன்றும் ஸ்தாபிக்கப்படும். இலகு புகையிரத சேவை ஒன்றும் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று இடம்பெற்ற பொழுது அமைச்சர் கருணாதிலக்க இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

அவர் மேலும் தகவல் தருகையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை விருத்தி செய்வதற்கு விசேட கடன் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் வசதிகளை பெற்று, நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை இலகுவாக முன்னெடுக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பெறுமதிசேர் வரி, நாட்டைக் கட்டியெழுப்பும் வரி, பொருளாதார சேவை கட்டணம் ஆகிய விடயங்கள் சார்ந்த சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *