பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை சகல தரப்புக்களுக்காகவும் வெளியிடப்படும் என்று ஜனாதிபதி தெரிவிப்பு.

Share Button

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கண்டறிவதற்கென நியமிக்கப்பட்ட மூன்று பேர் அடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அது பொது மக்களுக்காக பகிரங்கமாக வெளியிடப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உயர் மட்டத்திலான நீதிமன்ற அதிகாரம் கொண்ட விசாரணைக் குழுவாக இது நியமிக்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன் பாராளுமன்றத்திற்கு அதனை சமர்ப்பித்து, பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன. புதிய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெனரல் சாந்த கோட்டேகொட, கடமைகளை ஏற்றுக் கொண்டதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.

பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், உலகின் வேறெந்த நாடுகளிலும் இல்லாத வகையில், புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்டி, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளார்கள். இதற்காக ஜனாதிபதி அவருகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பாடசாலைகளின் பாதுகாப்பு வேலைத்திட்டம் பற்றியும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.

அரச – தனியார் நிறுவனங்களின் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியிருக்கின்றன. நிறுவனங்களின் ஊழியர்கள் வேலைத்தளங்களுக்கு திரும்பி வருகிறார்கள். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. போக்குவரத்தும் வழமைக்கு திரும்பியிருப்பதாக ஜனாதிபதி கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11