உழைக்கும் மக்கள் இன்று மே தினத்தைக் கொண்டாடுகிறார்கள்

Share Button

உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்கள் இன்று மே தினத்தைக் கொண்டாடுகிறார்கள். 1886ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி 8 மணித்தியால வேலை நேரத்தைக் கோரி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 40 ஆயிரம் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். மே மாதம் 3ம் திகதி வரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தார்கள். சம்பவத்தில் 50ற்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள். 1886ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி சிக்காக்கோ நகரில் இடம்பெற்ற தொழிலாளர் ஊர்வலம் இரத்தம் சிந்தலில் முடிவடைந்தது. இந்தப் போராட்டத்தின் விளைவாகவே இன்று 8 மணித்தியால வேலைநேரம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 1889ம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானித்திற்கு அமைய, 1890ம் ஆண்டில் சிலி, கியுபா ஆகிய நாடுகளில் முதல் தடவையாக மே தினம் கொண்டாடப்பட்டது. இலங்கையின் முதலாவது தொழிலாளர் தினம் 1927ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. ஏ.ஈ.குணசிங்ஹ தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் கட்சி முதலாவது மே தினத்தைக் கொண்டாடியது. அரசியல் கட்சியொன்று இலங்கையில் ஒழுங்கு செய்த முதலாவது மே தினக் கூட்டம் 1935ம் ஆண்டு இடம்பெற்றது. இலங்கைத் தொழிலாளர் கட்சி இதனை ஒழுங்கு செய்திருந்தது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *