உலகெங்கிலும் வாழும் உழைக்கும் மக்கள் இன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுகிறார்கள்

Share Button

உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்கள் இன்று சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். வல்லமை, ஒற்றுமை, போராட்டம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக உழைக்கும் மக்கள் மே முதலாம் திகதி ஒன்றிணைகிறார்கள். நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து, மே தினக் கூட்டங்களை நடத்துவதில்லை என்று பிரதான கட்சிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

ஆனால், சில அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் மே தினக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருக்கின்றன. இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்கத்தின் மே தினக் கூட்டம் கொள்ளுபிட்டியில் இன்று இடம்பெற்றது. மக்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்காது, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் சில்வெஸ்டர் ஜயகொடி தெரிவித்துள்ளார்.

தேசிய தொழிற்சங்க முன்னணியின் மே தினக் கூட்டம் கொழும்பு சமூக மற்றும் கூட்டிணைந்த கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்றது. தேசிய பாதுகாப்பிற்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு இணங்கி, பாதுகாப்புப் பிரிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென முன்னணியின் தலைவர் சமன் ரட்னபிரிய வலியுறுத்தினார்.

உழைக்கும் மக்களின் ஒத்துழைப்போடு, இலங்கையர்கள் என்ற ரீதியில் செயற்பட லங்கா சமசமாஜக் கட்சி தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் என்று கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்திற்கு அமைவாக, ராஜகிரியவில் அமைந்துள்ள கலாநிதி என்.எம்.பெரேராவின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.
இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பாதுகாப்பதற்காக அனைவரும் அணிதிரள வேண்டும் என்று சோஷலிஸ மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ராஜா கொல்லுரே தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமையை பாதுகாப்பதற்கு அனைவரும் அணி திரள்வது அவசியமாகும்.

தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதையும், பயங்கரவாதத்தை ஒழிப்பதையும்;, தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதையும் இலக்காகக் கொண்டு இம்முறை மே தினக் கூட்டத்தில் இணைந்து கொள்வதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தீவிரவாத பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறதென இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார். ஏ.இ.குணசிங்கவின் 128ஆவது ஜனன தினத்திற்கு அமைவாக, கொழும்பில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை செலுத்தும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தீவிரவாதத்தினால் இடம்பெற்றவையாகும் என்று நவசமசமாஜக் கட்சி வலியுறுத்தியிருக்கிறது.
கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ சமூகமும் இன்று மே தினத்தைக் கொண்டாடியது.
இதேவேளை, போராட்டத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக அமைச்சர் ராஜித்த குணரட்ன எமது நிலையத்திற்கு தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *