சமகால அரசாங்கம் நிலைபேறான அபிவிருத்தியை வெற்றி கொள்ளும் நோக்கத்திற்கு முன்னுரிமை வழங்கியிருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்

Share Button

சமகால அரசாங்கம் நிலைபேறான அபிவிருத்தியை வெற்றி கொள்ளும் நோக்கத்திற்கு முன்னுரிமை வழங்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அரச மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் விசேடத் திட்டமொன்று தேசிய கொள்கையாக இனங்காணப்பட்டுள்ளது. மேலும், சிறிய மற்றும் மத்திய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் விசேட கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயல் திட்டத்தை கண்காணிப்பதற்கு பாராளுமன்றத்தில் விசேட கண்காணிப்புக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டளவில் இந்த இலக்குகளை அடைய எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்களின் மூன்றாவது வருடாந்த மாநாடு இன்று காலை ஆரம்பமான போது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய வேளையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் தலைமையில் இந்த மாநாடு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் வரவேற்புரையை இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரிய வழங்கினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *