ஜப்பானின் புதிய பேரரசர் இன்று பதவியேற்றுள்ளார்

Share Button

நாட்டின் அடையாளத்தையும், ஒற்றுமையையும் பாதுகாப்பதாக ஜப்பானின் புதிய பேரரசர் நருஹித்தோ அறிவித்துள்ளார். 59 வயதான நருஹித்தோ, ஜப்பானின் புதிய பேரரசராக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவரது தந்தையான 85 வயதுடைய அக்கிஹித்தோ நேற்று பேரரசர் பதவியிலிருந்து விலகிக் கொண்டதைத் தொடர்ந்து, அவரது மகன் இன்று கடமைகளை ஏற்றுக் கொண்டிருக்கின்றார். புதிய பேரரசரின் ஆட்சி காலம் ரீவா யுகம் என்று அழைக்கப்படவிருக்கிறது. ஜப்பானின் 200 வருட வரலாற்றில் முதல் தடவையாக பேரரசர் ஒருவர் பதவியிலிருந்து விலகிய சந்தர்ப்பம் இதுவாகும். வயது, இயலாமை என்பனவற்றை கருத்திற்கொண்டு இந்தப் பதவியிலிருந்து விலகுவதாக பேரரசர் அறிவித்திருக்கின்றார். ஜப்பானில் பேரரசருக்கு அரசியல் ரீதியாக எந்தவித அதிகாரமும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு மத்தியில் மரபு ரீதியாக இருந்துவரும் கௌரவம் தொடர்ந்தும் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11