கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை பிரதேசத்திற்கு இன்று இரவு 9 மணியில் இருந்து நாளை அதிகாலை 5 மணி வரை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்.

Share Button

கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை பிரதேசத்திற்கு இன்று இரவு 9 மணியில் இருந்து நாளை அதிகாலை 5 மணி வரை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்தப் பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாகவும் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒற்றுமை கோலோச்சும் மக்கள் சமூகத்தைக் கட்டியெழுப்ப நாட்டை நேசிக்கும் எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டும் என பேராயர் பேரருட்திரு கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாட்டில் வாழும் மக்கள் வௌ;வேறு மொழிகளைக் கற்றுக் கொண்டு தம்மைப் போஷித்துக் கொள்ள வேண்டும் என பேராயர் குறிப்பிட்டார். அவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சியொன்றில் கருத்து வெளியிட்டார்.

பேராயர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

நாம் சந்திக்கும் ஒவ்வொரு அந்நியரும் எமக்கு அறிமுகம் இல்லாத நண்பர் ஆவார். அவருடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் அவரைப் புரிந்து கொள்ள முடியும். வௌ;வேறு மதங்களைப் பின்பற்றுவோர், வௌ;வேறு மொழிகளைப் பேசுவோர், வௌ;வேறு கலாசாரப் பின்புலங்களைக் கொண்டோர் முதலான சகலரையும் புரிந்து கொள்ளலாம். மனிதநேயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடசாலை என்பது மனிதர்கள் வாழும் சமூகமே என்று கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *