பயங்கரவாதத்தை தோற்கடிக்க இலங்கை பாதுகாப்பு பிரிவினரால் முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு.

Share Button

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு நாட்டின் புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு படையினர் மீது நம்பிக்கை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டு வளங்களை எதிர்கால பரம்பரையினருக்காக பாதுகாப்பது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த மேதினக் கூட்டம் கோட்டே நகர மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் 30 வருடங்கள் நிலைகொண்டிருந்த பயங்கரவாதத்தை தோற்பகடிக்க முடிந்தது. பாதுகாப்பு படைகளின் அர்ப்பணிப்பான சேவையினால், அதனை அடைய முடிந்ததாக அவர் தெரிவித்தார். எந்தவொரு இடையூறுகள்; ஏற்பட்டாலும் தொழிலாளர் தினத்தை கொண்டாடும் உரிமை இடதுசாரி கட்சிகளுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தின் சக்தியாக தொழிலாளர்கள் திகழ்வதாக இதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான சவால்களை அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி கொள்ள வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். உற்பத்திகள் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பலன் அவர்களைச் சென்றடைய இடமளிக்க வேண்டுமென இதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *