உயிரித்த ஞாயிறு தினத்தன்று அழிவை ஏற்படுத்திய பயங்கரவாதத்தை ஒழிக்கும் சக்தியாக வலுப்பெற வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share Button

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று அழிவை ஏற்படுத்திய பயங்கரவாதத்தை ஒழிக்கக்கூடிய சக்தியாக நாம் வலுப்பெற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றுடன் தொடர்புடைய தொழில் சங்கங்கள் ஏற்பாடு செய்த மே தின கூட்டம் இன்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபோதே அவர் இதனை கூறினார். இந்த தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும், வெளிநாட்டு இராணுவத்தை அழைக்கப் போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்தார். எமது நாட்டு இராணுவம் பலமிக்கது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான பலம் எமது பாதுகாப்பு பிரிவினரிடம் உள்ளது. கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின்போது, பாரிய வெற்றி கிடைத்துள்ளது. தனக்கு எந்தவொரு அச்சுறுத்தல் ஏற்படுகின்றபோதும் நாட்டிற்காக பயங்கரவாதத்தை ஒழிக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதன் பிரகாரம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி; குறிப்பிட்டார். அந்த குழுவிற்கு எவரும் தமது யோசனைகளை முன்வைக்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *