தற்போதைய நிலையில் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக ஐக்கிய நாடுகளின் பிரதிப் பொதுச் செயலாளர் உறுதியளித்துள்ளார்

Share Button

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் மிகெல் மொரடினோஸ்; பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார். இந்த கடினமான சந்தர்ப்பத்தில் முழு சர்வதேச சமூகமும் இலங்கையுடன் இணைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இச்சந்தர்ப்பத்தில் முழு ஐக்கிய நாடுகள் சபைக் கட்டமைப்பும் இலங்கை அரசினைப் பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்பதை அறியப்படுத்துமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தனக்கு அறிவித்துள்ளார் எனவும் பிரதிப் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *