உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் சிறந்த முறையில் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

Share Button

நாடளாவிய ரீதியாகவும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றிவளைப்புக்கள் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் றுவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த செயற்பாடுகள் சிறந்த முறையில் இடம்பெறுகின்றன. விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளும் சிறந்த முறையில் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அவசர காலச் சட்டத்தின் கீழ் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சோதனைகளை மேற்கொள்ளவும் கைது செய்வதற்குமான அதிகாரம் முப்படையினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *