வெறுப்பூட்டும் பேச்சுக்களுடன் தொடர்புடையவர்களை ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்திலிருந்து நீக்க நடவடிக்கை

Share Button

ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் புகழ்பெற்ற நபர்களை பேஸ்புக் பாவனையிலிருந்து தடை செய்யத் தீர்மானித்திருக்கிறது. இவர்களை ஆபத்தான தனிநபர்கள் என்று ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் குறிப்பிட்டிருக்கிறது. அமெரிக்காவின் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளரான அலக்ஸ் ஜோன்ஸ் வெறுப்பூட்டும் பேச்சுக்களில் ஈடுபட்டுவரும் பிரித்தானியாவைச் சேர்ந்த செய்தி ஆசிரியர் போல் ஜோஸப் யூத இனப் படுகொலை பற்றி கருத்து வெளியிட்டுவரும் லுயிஸ் ஃபர்ராகான் ஆகியோர் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேற்றப்படவிருக்கிறார்கள். ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் பிரித்தானியாவை தலையைகமாகக் கொண்டியங்கும் டீசவையin குசைளவ என்ற இஸ்லாமிய எதிர்ப்பு பக்கத்தையும் தடை செய்திருக்கிறது. சதிகார கோட்பாடுகள், வெள்ளை மேலாதிக்கம், இஸ்லாமிய எதிர்ப்பு பிரசாரம் என்பனவற்றில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் இந்தத் தடையை விதிக்க ஃபேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *