பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் அதிரடித் துடுப்பாட்ட வீரர் சயிட் அப்ரிடி தனது உண்மையான வயதை முதல் தடவையாக வெளிப்படுத்தியுள்ளார்

Share Button

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்டவீரர் சயிட் அப்ரிடியின் வாழ்க்கைச் சரிதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது. அப்ரிடியின் ரசிகர்களுக்கு மத்தியில் நீண்டகாலமாக நிலவிவந்த அவரது வயது தொடர்பான சந்தேகங்களுக்கு
புயஅந ஊhயபெநச என்ற சுயசரிதை நூல் முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக கிரிக்இன்போ இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. தாம் 1975ஆம் ஆண்டில் பிறந்ததாக சயிட் அப்ரிடி இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால், இதில் அவர் பிறந்த மாதமோ, திகதியோ குறிப்பிடப்படவில்லை. சயிட் அப்ரிடி 1980ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி பிறந்ததாக ஏனைய ஆவணங்களிலும், இணையதளங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்ற நிலையில், சயிட் அப்ரிடி தனது உண்மையான வயதை முதல் தடவையாக அறிவித்திருக்கின்றார். அதிரடி துடுப்பாட்டவீரரான சயிட் அப்ரிடி ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் வேகமான துடுப்பாட்டத்தை மேற்கொண்டு சாதனைகளை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *