பயங்கரவாத தாக்குதலின் பின்னர் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப நடவடிக்கை

Share Button

பாதுகாப்பு பிரிவினர் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் சேட் மற்றும் வங்கி பற்றுச் சீட்டுக கண்டு பிடிக்கப்பட்டன. அத்துடன் இரத்தம் சேகரிப்பதற்கு பயன்படுத்தும் குழாய்கள் ஒரு தொகையும், கைப்பற்றப்பட்டுள்ளது. முப்படை மற்றும் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது ஆயுதம் உட்பட யுத்த உபகரணங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புல்மோட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதும் , 89 டெட்டனேட்டர்கள், 32 டெட்டனனேட்டர் சாஜர்கள் உள்ளடங்கலாக மேலும் பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குருநாகல், வாரியப்பொல, சிலாபம், வனாத்தவில்லு, புத்தளம், மதுரங்குழி, இரணவில, எழுவன்குளம், கல்கமுவ ஆகிய பிரதேசங்களில் 17 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரங்குழி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின்போது வாகன இலக்கத் தகடுகள் 4 கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்போது சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தேடுதலின்போது இண்டு வாள், கையடக்கத் தொலைபேசிகள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *