நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சாகல தெரிவிப்பு

Share Button

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளதாக அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதலுடன் பின்னர்; இயல்பு நிலை சீர்குலைந்து இருந்தது. எனினும் அரசாங்கம் உடனடியாக செயற்பட்டு தற்போது ஸ்திரத்தன்மையை நிலை நாட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். பாத்தவிட்ட குருந்துவத்த பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டபோNது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தாக்குதல் சம்பவத்தின் பின்னர் சவால்களை எதிர்கொண்ட சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *