பயங்கரவாதத்தை ஒழிக்கும், பலம் ஜனாதிபதிக்கு உள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்

Share Button

பயங்கரவாதத்தை இலங்கையில் இருந்து ஒழிப்பதற்கு ஜனாதிபதியால் முடியுமென பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் பென்வெலஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அரசியல் தலைமைத்துவம் முக்கியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். பயங்கரவாதிகள் சகல தாக்குதலின்போதும் வேறுபட்ட அணுகு முறைகளை பயன்படுத்துகின்றனர். அவ்;வாறான அமைப்புகளை தோற்கடிப்பதற்கு வேறு நாடுகளுடன இரகசிய தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். இந்த சந்திப்பின்போது பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் பாராட்டினார். பயங்கரவாத தாக்குதல் மற்றும் எச்சரிக்கைகளை அறிந்து கொள்வதற்கு சகல நாடுகளினதும் புலனாய்வுப் பிரிவின்; தகவல்களை ஒன்றிணைத்த விசாரணை நிலையம் ஒன்றை அமைக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *