பாடசாலை ஆரம்பமாகவிருக்கும் நிலையில் வாகன நெரிசலை தவிர்க்க விசேட வேலைத்திட்டம்

Share Button

எதிர்வரும் 6ஆம்திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனால் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல்மாகாண ஆளுநர் அசாத் ஸாலி தெரிவித்துள்ளார். அதற்கிணங்க மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்லல் மற்றும் பாடசாலையில் இருந்து வீட்டு அழைத்துச் செல்லும்போது, வாகனங்கள் பாடசாலைக்கு அருகில் தரித்து நிற்க 3 நிமிடங்கள் மாத்திரம் வழங்கப்படவுள்ளது. வாகனங்களில் இருந்து மாணவர்களை இறக்குவதற்கான இடம் பாடசாலை நிர்வாகத்தினால் அடையாளப்படுத்தப் ;படவுள்ளன. இது தொடர்பில் பொலிசார் மற்றும் போக்குவரத்து திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஆளுனர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிகிச்சைகளுக்காக மாதாந்தம் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்கான மருந்துகளை வழங்குவதற்குமாறு ஆளுனர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வைத்தியசாலைகளில் மக்கள் கூடுவதை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-01 | 17:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 146
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 126
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 231
நோயிலிருந்து தேறியோர் - 18
இறப்புக்கள் - 2