பாடசாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவிப்பு

Share Button

பாடசாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு படையினர் உட்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

தரம் ஆறிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு நாளையதினம் பாடசாலையின் இரண்டாம் தவணை ஆரம்பமாகும் என்று அமைச்சர் எமது நிலையத்திற்கு தெரிவித்தார். தரம் ஐந்து வரையுள்ள மாணவர்களுக்கு எதிர்வரும் 13ம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

கனிஷ்ட பிரிவு ஆசிரியர்கள் தவிர ஏனைய பிரிவு ஆசிரியர்கள் அனைவரும் நாளையதினம் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரட்நாயக்க தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *