பாடசாலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமைக்காரியலம் தெரிவித்துள்ளது

Share Button

பாடசாலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமைக்காரியலம் தெரிவித்துள்ளது. கொழும்புக்குள் வாகனங்கள் வருகை தரும் பாலங்களை வெடிக்கச் செய்யும் பயங்கரவாத திட்டம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில், தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பின் பிரதான சூத்திரதாரி என கருதப்படும் மொஹமட் சஹ்ரான் ஹாசீம் உயிரிழந்ததை உறுதி செய்யும் நோக்கில் னுNயு பரிசோதனைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட குற்றவாளியான சமரசிங்க ஆராய்ச்சிலாகே மதூஷ் லக்சித அல்லது மாகந்துரே மதூஷ், மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப்புனாய்வுத் திணைக்களத்திடம்; ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *