புதிய நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை கிழக்கின் நுழைவாயிலாக பரிணமிக்கும் என பிரதமர் நம்பிக்கை

Share Button

திருகோணமலை நகர அபிவிருத்தித் திட்டம் அமுலுக்கு வந்ததும் அந்நகர் இலங்கையின் கிழக்கு நுழைவாயிலாக பரிணமிக்கும் என பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் வரையப்பட்ட திருகோணமலை நகர அபிவிருத்தி திட்டத்தை கையேற்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிக்கையை கையளித்தார்.

அடுத்து வரும் 20 ஆண்டுகால பகுதியில் வங்களா விரிகுடாவின் கரையோர நாடுகள் பெரும் அபிவிருத்தி காணும். இந்த அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொள்ள திருகோணமலை நகர அபிவிருத்தித் திட்டம் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார்.

அரசாங்கம் மேல் மாகாணத்தில் தொடங்கி ஒட்டுமொத்த இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் பாரியதொரு அபிவிருத்தி வேலைத்திட்டத்தை தொடங்கியிருப்பதாக அவர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *