நீர்கொழும்பு சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை. – சந்தேகத்தின்பேரில் இருவர் கைது

Share Button

கைது செய்யப்பட்டுள்ள மாக்கந்துறே மதூஷிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அவர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் பொறுப்பில் உள்ளார்.

கொச்சிக்கடை போறுதோட்ட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் சந்கேத்தின்பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சிலர் இனம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவான் குணசேகர தெரிவித்துள்ளார். இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த சம்பவத்தின்போது மோட்டார் சைக்கிளும்;, சில முச்சக்கரவண்டிகளும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை முப்படையினர் மற்றும் பொலிசார் தொடர்ந்து நாடு தழுவிய ரீதியில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்றும், இன்றும் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின்போது ஆயுதங்கள் உட்பட பல பொருட்களை கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *