நாளை தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்

Share Button

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை அமுலாக்க சுகாதார அமைச்சு தயாராகிறது.
இந்த வேலைத்திட்டம் நாளை தொடக்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைமுறைப்படுத்தப்படும். நாட்டிலுள்ள 18 மாவட்டங்களில் அதிக டெங்கு அபாயமுள்ள 75 சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தைச் சேர்ந்த சிறப்பு நிபுணர் ஹசித திசேரா வேலைத்திட்டம் பற்றி விபரித்தார். இதில் சுகாதார உத்தியோகத்தர்கள், செஞ்சிலுவைச் சங்க, சர்வோதய அதிகாரிகள் ஆகியோர் இணைந்து கொள்வார்கள். இவர்கள் வீடுகளைச் சோதிப்பார்கள். கடந்த நான்கு மாதங்களில் 16 ஆயிரம் டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டார்கள். இவர்களில் 23 பேர் உயிரிழந்ததாக சிறப்பு நிபுணர் ஹசித திசேரா குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *