சட்டத்திற்குப் புறம்பான வகையில் வைத்திருக்கும் ஆயுதங்களை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க நடவடிக்கை

Share Button

சட்டத்திற்குப் புறம்பான வகையில் தாம் வைத்திருக்கும் ஆயுதங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கொழும்பு மாவட்ட பேராயர் பேரருட்திரு கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று நீர்கொழும்பு பிரதேசத்திற்கு விஜயம் செய்த பின்னர் பேராயர் ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்டார்.

பயந்தவர்களுக்கே ஆயுதங்கள் தேவை. பயம் இல்லாதவர்களுக்கு ஆயுதங்கள் தேவையில்லை. மனிதர்களாக மற்றவர்களுக்கு அஞ்சி வாழ்கிறோமாயின், நாம் சமயம் போதித்த அறத்தின் அடிப்படையில் வாழவில்லை. சமயத்தின் அடிப்படையில் வாழ்பவர்களுக்கு ஆயுதங்கள் தேவையில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென பேராயர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11