நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உயர்ந்தபட்ச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் பிரிவின் பிரதானிகள் குறிப்பிட்டுள்ளனர்

Share Button

நாட்டின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட சகலரையும் பாராட்டுவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் சாந்த ஹெட்டிகொட தெரிவித்துள்ளார். பாதுகாப்பு செயலாளரினால் விடுக்கப்பட்ட விசேட அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோல், நாட்டின் பாதுகாப்பிற்காக உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் சகல துறைமுகங்களினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி ரியட் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

விமான நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பத்தி குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சகலரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் அல்லது உயிரிழந்துள்ளார்கள் என பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்ன தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *