அவசியம் அற்ற கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டாமென நான்கு மஹாநாயக்கர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Share Button

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு, வெசாக் தினத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடும் வகையிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் என பௌத்த மதத்தின் நான்கு பீடங்களைச் சேர்ந்த மஹாநாயக்கர்கள்; பொதுமக்களிடம் கூட்;டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இவ்வாறான நிகழ்வுகளை தவிர்க்குமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைதியை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது.

இந்த நிலையில் விகாரைகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செவான் பண்டிகையை கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தோரணங்களை அமைக்கும் போது பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்றும் மஹா நாயக்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *