நாட்டின் பாதுகாப்பு வழமைக்கு திரும்பியிருப்பதாக பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்

Share Button

நாட்டின் பாதுகாப்பை வழமைக்குக் கொண்டுவர பாதுகாப்புப் பிரிவினரால் முடிந்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட கூற்றொன்றை முன்வைத்து பிரதமர் பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றினார்.

தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுவோர் பற்றியும் விசாரணைகள் இடம்பெறுகிறது. கல்வி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படாத வகையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

2014ஆம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து சிரியா சென்ற ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. துருக்கி ஊடாக இவர்கள் சிரியா சென்றிருக்கிறார்கள். மொஹமட் முஹ்ஸீன் இஷாக் அஹமட், மொஹமட் உனைஸீன் மொஹமட் அமீன், மொஹமட் சுவைர் மொஹமட் அறூஸ் ஆகியோர் இலங்கையிலிருந்து சிரியா சென்றவர்களாவர். ஐஎஸ் இராஜ்யம் பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர் ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானுக்குச் சென்று, ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் இலங்கை திரும்பினார்களா என்பது பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ள மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல் ஹக் என்பவர் 2014ஆம் ஆண்டில் சிரியா சென்று ஆயுதப் பயிற்சியை பெற்றவராவார். தெஹிவளையில் குண்டை வெடிக்கச் செய்து கொண்ட அப்துல் லத்தீப் மொஹமட் ஜமீல் என்பவர் 2014ஆம் ஆண்டு ஐஎஸ் அமைப்புடன் இணைந்து கொள்வதற்காக சிரியாவுக்குள் நுழையும் நோக்கில் துருக்கி சென்றிருந்தார். ஆனால், அவர் அங்கு செல்லாது மீண்டும் நாடு திரும்பியிருக்கின்றார். ஐஎஸ் அமைப்புக்காக கொலை செய்யப்பட்ட முதலாவது இளைஞர் மொஹமட் மூஹ்ஸின் சப்ராஸ் நிலாம் என்பவராவார்.
இலங்கையிலிருந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி இவர்கள் தமது பெற்றோரையும் துருக்கி ஊடாக சிரியாவிற்கு அழைத்துச் செல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி இலங்கை திரும்பியிருக்கிறார்கள். பெற்றோரின் செயற்பாடுகள், அவர்கள் தொடர்பு வைத்திருப்பவர்கள் ஆகியோர் பற்றி புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

அண்மையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கும், முற்றாக அங்கவீனம் அடைந்தவர்களுக்கும் இழப்பீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்டுவாபிட்டிய, மட்டக்களப்பு, கொச்சிக்கடை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்ட 100 பேரின் குடும்பத்தவர்களுக்கும், காயமடைந்த 40 பேருக்கும் முதற்கட்ட இழப்பீடு வழங்கப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-06 | 17:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 178
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 139
புதிய நோயாளிகள் - 2
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 259
நோயிலிருந்து தேறியோர் - 33
இறப்புக்கள் - 5