தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட குகையை அரும்பொருட்காட்சியகமாக மாற்றும் திட்டம்.

Share Button

நீர் நிரம்பிய குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும், பயிற்றுவிப்பாளரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் காட்சி அடங்கிய முதல் காணொளி வெளியாகியுள்ளது.
இந்த சிறுவர்களில் பலர் வாயை மறைக்கும் முகமூடி அணிந்து, ஆஸ்பத்திரியில் அணியும் உடையுடன் காணப்படுகிறார்கள். இவர்களில் ஒருவர் கையை உயர்த்தி தாம் வெற்றி பெற்றோம் என்று சமிக்ஞை காட்டுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
11 முதல் 16 வரையிலான வயதுடைய 12 சிறார்களும், அவர்களின் காற்பந்தாட்ட பயிற்றுவிப்பாளரும் கடந்த 23 ஆம் திகதி தொடக்கம் தாய்லாந்தின் தாம் லுவாங் குகைத் தொகுதியில் சிக்கியிருந்தார்கள். பல நாடுகளைச் சேர்ந்த சுழியோடிகள், நிபுணர்கள் ஆகியோரின் ஆதரவுடன் சகலரும் மீட்கப்பட்டார்கள்.

இந்த மீட்புப் பணிகள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது மிகவும் அபாயகரமான பணியாக இருந்ததால், சிறுவர்கள் பதற்றம் அடைவதைத் தடுக்கும் தேவை இருந்தது. இதற்காக, சிறுவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்ததாக மீட்புப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர். உலகின் கவனத்தை ஈர்த்த மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட விதத்தை சித்தரிக்கும் புதிய வீடியோவையும் தாய்லாந்து கடற்படை வெளியிட்டுள்ளது.

இந்தப் பதின்மூன்று பேரும் இருவாரங்களுக்கு மேலாக சிக்கியிருந்த தாம் லுவான் குகை, உயிரோட்டமான அரும்பொருள் காட்சியகமாக மாற்றப்படும் என மீட்புப் பணியின் தலைவர் தெரிவித்துள்ளார். குகையை சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டங்களையும் அவர் நேற்று செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
தாம் லுவாங் குகையில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படமொன்றைத் தயாரிக்க நிறுவனமொன்று தயாராகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *