சுவசெரிய அம்ப்யூலன்ஸ் சேவைக்கென நாடு பூராகவும் அலுவலகங்கள்

Share Button

சுவசெரிய சேவைகளுக்காக நாடளாவிய ரீதியில் அலுவலகங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் செப்டெம்பர் மாதங்களில் இவ்வாறான 100 அலுவலகங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. தற்சமயம் 200 அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு அலுவலகத்திற்கென 20 லட்சம் ரூபா செலவிடப்பட்டிருக்கிறது.

1990 என்ற இலக்கத்தில் செயற்படும் சுவசெரிய சேவைக்கான மொபைல் அப் வசதியை அறிமுகம் செய்யும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார். ராஜகிரியவில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் நிகழ்வு இன்று இடம்பெற்றது. கடந்த 3ஆம் திகதி வரை 1990 என்ற இலக்கத்திற்கு பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் அழைப்புக்களை மேற்கொண்டிருக்கிறார்கள். இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இதன் மூலம் நன்மை அடைந்திருக்கிறார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *