ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேக நபர்களை பிணையில் செல்ல அனுமதித்தமை குறித்து விசாரணை

Share Button

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை பற்றி பொலிசார் விசேட விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது. பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவு இந்த விசாரணையை முன்னெடுக்கிறது. வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் தவறுதல்கள் காரணமாகவே சந்தேக நபர்களுக்கு பிணையை பெற்றுக் கொள்ள முடிந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படுமாயின் உரிய அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் அறிவித்திருக்கிறார்கள்.

இதேவேளை நீர்கொழும்பு பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் பற்றி இரண்டு தரப்புக்களும் மத்தியஸ்த முயற்சிக்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றன. இரண்டு தரப்புக்களினதும், மதத் தலைவர்கள், இது பற்றி பொலிசாருக்கு அறிவித்திருக்கிறார்கள். இந்த முயற்சிக்கு உயர்ந்தபட்ட ஒத்துழைப்பு வழங்கப்படுமென்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *