சமகால சட்ட ஏற்பாடுகளில் உள்ள நலிவு காரணமாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Share Button

உலகளாவிய பயங்கரவாதத்தை தோற்கடிக்க நாட்டில் உள்ள சட்டம் போதுமானதாக இல்லை. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இந்த சட்டமூலத்தின் ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்படுவதில்லையெனவும், அவர் குறிப்பிட்டார். தேவைப்படின் அதற்கு திருத்தங்களை முன் வைக்கலாம். இதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு சலுகை கிடைக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டார். குறுகிய அரசியல் நோக்கங்களைத் தள்ளி தற்போதுள்ள சட்டங்களை மேலும் வலுப்படுத்த அனைவரும் இணைய வேண்டுமென பிரதமர் சகல கட்சிகளிடமும் கேட்டுக் கொண்டார்.

சுற்றுலாத்துறையை மீண்டும கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார். சுற்றுலாத்துறையினர் கடன் செலுத்துவதற்கு சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் முன்னெடுனக்கப்படும் பொய் பிரசாரங்களை தடுப்பதற்கான சட்டக் கட்டமைப்பொன்று கொண்டுவர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்துவதன் மூலம் அடிப்படைவாதத்தை தோற்கடிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

உலகளாவிய பயங்கரவாதத்தை நாட்டிற்குள் வந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார். நாட்டையும், நாட்டு மக்களையும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பிற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும். தேசிய ரீதியில் புரிந்துணர்வை கட்டியெழுப்புவதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதில் பெரும் பொறுப்பு சமூகத்திற்கு உள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

உலகளாவிய பயங்கரவாதத்திற்கு முகம் கொடுக்க குடிவரவு, குடியகல்வு சட்டத்தை வலுப்படுத்த வேண்டுமென அமைச்சர் வஜிர அபேவர்த்த தெரிவித்தார். இனங்களுக்கிடையில் வேறுபாடோ, வைராக்கியமோ ஏற்படாத வகையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *