பயங்கரவாதிகளுக்கு பெருந்தொகை பணம் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் வர்த்தகர்கள் பற்றிய தகவல்கள் அம்பலம்

Share Button

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு கோடிக் கணக்கான சொத்துக்களை திரட்டுவதற்கு நிதியுதவி வழங்கியதாக சந்தேகிக்கப்படும் வர்த்தகர்கள் பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

குளியாபிட்டிய பிரதேச நகைக் கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நகைக் கடையின் வங்கிக் கணக்குகள் சோதனையிடப்படுகின்றன.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு 700 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும், கோடிக் கணக்கான ரூபா பெறுமதியுடைய பணம் வைப்புச் செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளும் இருந்துள்ளமை பற்றி தகவல் கிடைத்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், சந்தேகத்தின் பேரில் கைதான நபர்கள் ஆகியோரது வங்கிக் கணக்குகளும் சோதனையிடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நேற்று மாளிகாவத்தை பிரதேசத்திலிருந்து பொதுக் கிணறொன்றில் இருந்து 56 வாள்கள் கண்டெடுக்கப்பட்டன. மாளிகாவத்தை கெத்தாராம மைதானத்தின் சி நுழைவாயிலுக்குப் பின்னால் உள்ள வணக்கஸ்தலத்தில் சுமார் 20 ஆழமான பொதுக் கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றை சோதனையிட்ட போது, சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட 44 வாள்களும், பழையவையான 12 வாள்களும், 49 கத்திகளும், சந்தேகத்திற்கிடமான 26 இறுவட்டுக்களும், ஐஸ் போதைப் பொருட்களும் மீட்கப்பட்டன. நாட்டின் ஏனைய பாகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளிலும் இவை போன்ற பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11