மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை துரிதமாக புனரமைக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

Share Button

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

சேதமடைந்த தேவாலயத்தை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி, தேவாலயத்தின் புனருத்தாரண பணிகளை துரிதப்படுத்துமாறு கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்தத் துன்பியல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தேவாலயத்தின் பிரதம திருத்தந்தை அருட்திரு ரொஷான் மஹேஷன் உள்ளிட்ட பாதிரியார்களுக்கும், கிறிஸ்தவ மக்களுக்கும் ஜனாதிபதி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

ஜனாதிபதியின் விஜயத்தில் அமைச்சர் தயா கமகே, கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் இணைந்திருந்தார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *