ஐபிஎல் சுற்றுத்தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற்றம்

Share Button

இந்தியன் பிரிமியர் லீக் சுற்றுத்தொடரின் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறும் அணியை தெரிவு செய்வதற்கான நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 2 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் வீரர்கள் 8 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை எடுத்தார்கள். டெல்லி வீரர்கள் ஒரு பந்துவீச்சு எஞ்சிய நிலையில் வெற்றி இலக்கை தாண்டினார்கள். இதன் பிரகாரம், நாளை விசாகப்பட்டினத்தில் இடம்பெறும் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை சந்திக்கும். இதில் வெற்றிபெறும் அணி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *