திட்டமிட்டதுபோல் தேசிய வெசக் உற்வசம் நடைபெறும் என அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவிப்பு
தேசிய வெசக் உற்வசத்தை திட்டமிட்டதுபோல் நடத்தவுள்ளதாக அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார். எந்தவொரு காரணங்களுக்காகவும் அதனை ரத்துச் செய்யப்போவதில்லை என அவர் குறிப்பிட்டார். புத்தசாசன அமைச்சில் ,ன்று நடைபெற்ற கூட்டத்தின் போது அமைச்சர் ,தனைத் தெரிவித்தார். ஹிக்கடுவ – தொட்டகமுவ – ரன்பத் விகாரையில் ,ம்முறை தேசிய வெசக் நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.