கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்டவரின் சகோதரர் உட்பட சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

Share Button

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட நபரின் சகோதரர் உட்பட சந்தேக நபர்கள் மூவரை எதிர்வரும் 23ஆம் திகதி அடையாளம் காண்பதற்காக ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி லங்கா ஜயரத்ன ,ன்று ரகசியப் பொலிசாருக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார். பாதுகாப்புச் செயலாளரிடம் ,ருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 90 நாள் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவிற்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் மூவரும் பொலிசாரின் பொறுப்பில் விசாரணை செய்யப்படுவதாக பொலிசார் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர். சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக ரி.என்.ஏ.அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் ரகசியப் பொலிசார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

,தேவேளை, சிலோன் தௌஹீத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராஷீக்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் காஞ்சனா சில்வா கொழும்பு குற்றப்புலனாய்விற்கு ,ன்று அறிவித்தார்.

2016ஆம் ஆண்டு மாளிகாவத்தைப் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின்போது பொதுபல சேன அமைப்பின் செயலாளர் சங்கைக்குரிய கலகொட அத்தேஞானசார தேரரை வசைபாடி ,னங்களுக்கு ,டையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை அனைத்தும் சட்ட மா அதிபருக்கு அனுப்பியுள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திடம் தெரிவித்தது.
எனினும், ,துவரை அது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை எனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *