முஸ்லீம் சமுகத்தின் பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தாக்குதலை அகில ,லங்கை ஜமியத்துல் உலமா கண்டித்துள்ளது

Share Button

முஸ்லிம் சமூகத்தின் பெயரை பயன்படுத்தி கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலை அணைத்து முஸ்லிம் மக்களும் வன்மையாக கண்டிப்பதாக அகில ,லங்கை ஜமியத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்ஃதி தெரிவித்துள்ளார். அந்த பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து ,லங்கை முஸ்லிம்கள் ,க்கட்டான நிலைக்கு முகம் கொடுப்பதாகவம் அவர் குறிப்பிட்டார்.

அகில ,லங்கை ஜம்யத்துல் உலமா, முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,ணைந்து ,ன்று நடத்திய ஊடகவியலார் சந்திப்பின்போதே அவர் அதனை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ,டம்பெற்ற குண்டுத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்கள் ஈடுசெய்ய முடியாதவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுஃப் ஹக்கீம் தெரிவித்தார். நாடு தற்போது ,யல்பு நிலைக்கு திரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குண்டுத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் முஸ்லிம் சமூகம் பாதுகாப்புத் தரப்பினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாக ,ந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுண்சிலின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11