அரசியல் நோக்கங்களுக்காக முன்வைக்கும் கருத்துக்கள் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தைப் பாதிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

Share Button

சிலர் அரசியல் நோக்கங்களுக்காக முன்வைக்கும் கருத்துக்கள்
பயங்கரவாத சவால்களில் ,ருந்து நாட்டை மீட்டெடுத்து, கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு பாதிப்பாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள சகலரும் சுதந்திரமானதும் அமைதியுமான சமூகத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பது பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அகில ,லங்கை ஜமியத்துல் உலமா சபை உட்பட முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே ஜனாதிபதி ,தனைத் தெரிவித்துள்ளார்.

பல சமயத்தவர்கள் வாழும் நாட்டில் எந்தவொரு நபருக்கும் பாகுபாடு காட்டப்படக் கூடாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாட்டில் தற்போதுள்ள நிலமையைக் கவனத்தில் கொண்;டு கருத்துக்களை வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

,தேவேளை, முஸ்லிம் சமூகம் அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை முழு அளவில் வெறுப்பதாக ,ந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். மிலேச்சத்தனமான பயங்கரவாதக் குழுவை முஸ்லிம் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்துவது முழு முஸ்லிம்; மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டனர். மிலேச்சத்தனமான பயங்கரவாதத்திற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் முஸ்லிம் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *