மீனவர்களுக்கு புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Share Button

மீனவர்களுக்காக புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மீனவ மற்றும் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ் ருவன்சந்திர தெரிவித்துள்ளார். மீனவர்களின் கைவிரல் அடையாளமும் அந்தப் புதிய அடையாள அட்டையில் உள்ளடக்கப்படும். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கும் இந்த புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதற் கட்டமாக 30 ஆயிரம் மீனவர்களுக்கு இந்த புதிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளது. எதிர்வரும் சில மாதங்களில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *