ஷரியா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது கடந்த அரசாங்கத்தின் காலத்திலேயே என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்

Share Button

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெறும் ஒத்திவைப்பு வேளை தொடர்பான விவாதம் இன்று 3ஆவது நாளாகவும் இடம்பெறுகிறது.

விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஹர்ஷ டி சில்வா சகலருக்கும் ஒரே வகையில் சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குறிப்ப்pட்டார்.

ஷரியா பல்கலைக்கழகங்கள் 2013ஆம் ஆண்டு கடந்த அரசாங்கக் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

சகல முஸ்லிம் மக்களும் பயங்கரவாதிகள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

பிரிவினைவாதிகளை ஒழிப்பதற்கு சகல முஸ்லிம் தலைவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களிடம் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியது அரசாங்கத்தி பொறுப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *