குண்டுத்தாக்குதலில் உயிரிந்தவர்களின் உறவினர்களுக்கும், எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் இழப்பீடுகள்.

Share Button

உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களினால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதிக்குள் இழப்பீடு வழங்கப்படுமென்று, இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவரையில் நஷ்ஈடாக 67 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டிருந்தது. உயிரிழந்த 126 பேருக்காக 63 மில்லியன் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு 43 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை நஷ்டஈடாக வழங்கப்பட்டிருப்பதாக இந்த அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜயபால எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.

இதேவேளை குண்டுத் தாக்குதலினால் கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் கொழும்பு குண்டுத் தாக்குதலினால் உயிரிழந்த மற்றும் காயமடைந்த 50 பேருக்கு 21 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை இன்று வழங்கப்பட்டதாக பணிப்பாளர் கூறினார். உயிரிழந்த 18 பேருக்கு தலா எட்டு இலட்ச ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வில் அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

கட்டுவாப்பிட்டிய, சீயோன் தேவாலயங்களின் புனரமைப்புக்காக இந்த அலுவலகம் தலா பத்து மில்லியன் ரூபா வீதம் நிதி வழங்கியுள்ளது. கட்டுவாப்பிட்டிய மற்றும் மட்டக்களப்பு தேவாயங்களின் புனரமைப்புப் பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிதி உதவி இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கொச்சிக்கடை தேவாலய புனரமைப்புக்கான நிதி கடற்படையினரிடம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் பெரும்பாலானோர் நாட்டின் ஏனை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதனால், சம்பந்தப்பட்ட பிரதேச அலுவலகங்கள் மூலம் இழப்பீட்டுத் தொகை வங்கிகளில் வைப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்டுவாப்பிட்டிய தேவாலய குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும் என்று பணிப்பாள் மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *